திமுகவின் பேக்கரி டீலிங் என்பது நாடறிந்த ஒன்று தான் - அதிமுக ஐடி விங்க் கடும் விமர்சனம்!
DMK PM SHRI school issue ADMK
மக்களவையில் இன்று மத்திய கல்வி அமைச்சர் பேசும் காணொளி ஒன்றை வெளியிட்டு, அதிமுகவின் ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
"மும்மொழிக் கொள்கையை ஒப்புக்கொண்டு PM- SHRI பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஸ்டாலின் மாடல் திமுக அரசு கையெழுத்து இட்டது என்ற உண்மையை மத்திய கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று அம்பலப்படுத்தியுள்ளார்.
திமுகவின் பேக்கரி டீலிங் என்பது நாடறிந்த ஒன்று தான்.
டங்ஸ்டன் விவகாரத்தில் வெளியில் எதிர்ப்பு நாடகம் போட்டு, திரைமறைவில் தாங்களே சுரங்கம் நடத்திட அனுமதி கேட்டு துரோகம் இழைத்த தீயசக்திகள், அதே பார்முலாவில் தமிழ்நாட்டிற்கு எதிரான, மாணவர்களுக்கு இந்த பெரும் துரோகத்தையும் இழைத்துள்ளனர்!
ஆளுங்கட்சியாக இருந்தும் சாலையில் உருண்டு "இந்தி எதிர்ப்பு" போராட்ட நாடகம் ஆடியபோதே தெரியும், திமுக+முக ஸ்டாலின் நீங்கள் கொல்லைப்புற வழியாக இந்தி பாடம் எடுப்பதற்கான கதவுகளைத் திறக்கப்போகிறீர்கள் என்று! #HindiTeacher_MkStalin " என்று விமர்சித்துள்ளது.
English Summary
DMK PM SHRI school issue ADMK