#தமிழகம் || டாஸ்மாக் பார் ஓனர், திமுக பிரமுகர் வெட்டி படுகொலை.! பெரும் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


நெல்லை அருகே திமுக நிர்வாகி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பொன்னுதாஸ். இவர் திமுகவின் முப்பத்தி ஒன்பதாவது வார்டு செயலாளராக இருந்து வந்தார். 

இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பிய போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று, அவரின் வீட்டின் அருகே வைத்து, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.

இதில் சம்பவ இடத்திலேயே பொன்னுதாஸ் துடிதுடிக்க உயிரிழந்தார். இந்தக் கொலையைப் பார்த்த பொன்னுதாசின் தாய் கூச்சலை கேட்டு, ஒன்று திரண்ட பொதுமக்கள் பாளையங்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து பொன்னுததாஸின் உடலை கைப்பற்றிய போலீசார், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ள பொன்னுதாசின் தாய், நேர்காணலுக்கு தயாராகி வந்துள்ளார். மேலும், பாளையங்கோட்டையில் உள்ள மதுபான கூடத்தையும் பொன்னுதாஸ் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இவரின் கொலைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக? அல்லது தொழில் போட்டி காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk ponnudoss murder


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->