NIA-வா? NAI-யா? திமுக நிர்வாகியின் சர்ச்சைக்குரிய பதிவு!
DMK Rajiv Gandhi referred to the National Intelligence as a dog
உபா சட்டத்தின் படி ஒன்றிய அரசின் "NAI" உள்ளது!
கோவை கார் கொண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடையதாக இதுவரை ஆறு பேரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என பாஜக தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. மேலும் கோவை மாநகரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அனைத்து ஜமாத்துகளின் கூட்டத்தை நடத்தினார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று பரிந்துரை செய்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்ததை வரவேற்றார். மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு தேவையான அறிவுரைகள் வழங்குவது தமிழக பாஜகவின் கடமை எனவும் தெரிவித்திருந்தார். தமிழக பாஜகவினர் ஸ்டாலினின் நிர்வாக திறமையை பற்றி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளரும் முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் யாரும் அதனை நியாயப்படுத்த முடியாது!
கோவை சம்பவத்தில் அண்ணாமலை அரசியல் செய்வது கீழ்தரமானது!
வெளிநாட்டு பயங்கரவாதம், தனிநபர் தீவிரவாதம் இவைகளை கண்டுபிடிக்க, புலனாய்வு செய்ய சகல அதிகாரங்களையும் UAPA Act 2008ன்படி ஒன்றிய அரசின் NAI-க்கு உள்ளது!
கோவை சிலிண்டர் வெடிப்பில் தொடர்புடையவர் ஏற்கனவே NIA விசாரனைக்கு உள்ளான நபர் என்றால் அவரை ஏன் NAI கண்கானிக்காமல் கோட்டை விட்டது?
என்று கேள்வி கேட்டு அரசியல் செய்தால் புலனாய்வு அமைப்பின் நம்பகத்தன்மையினை மக்கள் இழந்து விடுவார்கள்!
புலனாய்வு அமைப்புகளை செயல்பட விடுங்கள் சங்கிகளை!! என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் மூன்று இடங்களில் "NAI" என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. "NAI" என்ற வார்த்தை உச்சரிக்கும் பொழுது "நாய்" என பொருள்படும்படியாக அமைந்துள்ளது. இதனால் திமுகவைச் சேர்ந்த ராஜீவ் காந்தி தேசிய புலனாய்வு அமைப்பை நாய் என்று குறிப்பிடுகிறாரா? குறிப்பாக அந்த பதிவில் "சிலிண்டர் வெடிப்பில் தொடர்புடையவர் ஏற்கனவே NIA விசாரணைக்கு உள்ளான நபர்" என்ற வாக்கியத்தில் மட்டுமே NIA என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தன்னாட்சிமிக்க சுதந்திரமாக செயல்படக்கூடிய அதிகாரம் மிக்க ஒரு அமைப்பை திமுகவின் உடன்பிறப்பு விமர்சனம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தன் பின்னால் திராவிட முன்னேற்ற கழகமும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் இருக்கும் தைரியத்தில் இவ்வாறான விமர்சனங்களை உடன்பிறப்புகள் முன் வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
English Summary
DMK Rajiv Gandhi referred to the National Intelligence as a dog