போதைப் பொருள் மெத்தப்பட்டமைன் கடத்திய திமுக நிர்வாகி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம்!
DMK Ramnathpuram drug smuggling case
சென்னை கேளம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து 70 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 7 கிலோ மெத்தப்பட்டமைன் போதை பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றிய உள்ளனர்.
மேலும் இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த இருவர் உட்பட மூன்று பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் திமுக சிறுபான்மை அணி துணைத் தலைவர் இப்ராஹீம் என்பவரும் போதைப்பொருள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களின் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது
ஏற்கனவே முன்னாள் திமுக நிர்வாகியான ஜாபர் சாதிக் சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி இஸ்மாயிலை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவர் சையது இப்ராஹீம் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
இவரோடு கழகத்தினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அந்த அறிவிப்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK Ramnathpuram drug smuggling case