மெரினா மரணம்: சிலரின் அஜாக்கிரதை காரணமாக இது நிகழ்ந்திருக்கிறது - ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
DMK RS Bharati Congress Selvaperunthagai ay about marina Death
இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தாவது, "விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்திருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று.
அரசின் சார்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தது. சிலரின் அஜாக்கிரதை காரணமாக இது நிகழ்ந்திருக்கிறது.
கடந்த 2016 தேர்தலின் போது ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில் 6 பேர் இறந்ததை ஈபிஎஸ் மறக்க கூடாது" என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
முன்னதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், "வான் சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விமானப்படை கடந்த காலங்களில் மாலை நேரங்களில் இதுபோன்ற சாகசங்களை செய்துள்ளது. தற்போது உச்சி வெயிலில் சாகச நிகழ்ச்சிகளை நடத்த காரணம் என்ன?
தமிழக அரசு விரிவான ஏற்பாடுகளை செய்ததாக பார்வையாளர்களே கூறுகின்றனர். 5 பேர் உயிரிழப்பை வைத்து அரசியல் செய்ய கூடாது.
மாலையில் நடத்தாமல், உச்சி வெயிலில் நிகழ்ச்சியை நடத்தியது ஏன்? நீர்ச்சத்து குறைபாடு காரணமாக 5 பேர் மயங்கி உயிரிழந்துள்ளனர். மதியம் 12 மணிக்கு, சாகச நிகழ்ச்சி தேவையா? விசாரணை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும்.
நெரிசலில் யாரும் உயிரிழக்கவில்லை, நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே உயிரிழப்பு. பாதுகாப்பு குறைபாடு காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
DMK RS Bharati Congress Selvaperunthagai ay about marina Death