எம்ஜிஆர் ஒரு கோழை.. நான் ஒருத்தனுக்கு பொறந்தவன்... ஆர்.எஸ் பாரதியின் சர்ச்சை பேச்சு...!! - Seithipunal
Seithipunal


திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி "இந்திரா காந்தி அம்மையார் மாநில கட்சிகளை எல்லாம் தடை செய்யப் போகிறோம் என ஆவேசமாக பேசினார். இன்றைக்கு எவன் எவனோ பேசுறானே.. ஆட்டுக்குட்டி அண்ணாமலை இவ்ளோ கூச்சல் போடுறானே.. பாஜக இந்திரா காந்தி ஆட்சியில் ஜன சங்கம் என இருந்தது எமர்ஜென்சி நேரத்தில் அதை கலைச்சிட்டாங்க.

இந்தியா முழுவதும் பல மாநில கட்சிகளை கலைத்து விட்டார்கள். ஏன் எம்ஜிஆர் எமர்ஜென்சி காலத்தில் அதிமுக என்று ஆரம்பிக்கப்பட்ட கட்சியை வெளியே சொல்லாமல் கொள்ளாமல் பயந்து கொண்டு பம்பினார். இவருக்கு பெரிய புரட்சித் தலைவர் பட்டம் வேறு. யாரையும் கேட்காமல் கொள்ளாமல் அதிமுக என்பதை அனைத்திந்திய அதிமுக என்று மாற்றிக்கொண்ட ஒரு கோழை தான் எம்ஜிஆர் என்பதை நான் பகிரங்கமாக சொல்லுவேன்.

ஆனால் திமுகவில் இருந்த நாவலர் குடும்பத்தில் யாரும் ஜெயிலில் இல்லை, ராஜாராம் குடும்பத்தில் யாரும் ஜெயிலில் இல்லை, பேராசிரியர் குடும்பத்திலும் யாரும் ஜெயிலில் இல்லை. ஆனால் தலைவர் கலைஞர் வீட்டில் தான் இரண்டு பேர் மிசா கைதிகளாக இருக்கிறார்கள். ஒருவர் முரசொலி மாறன் மற்றொருவர் தளபதி மு.க ஸ்டாலின். தலைவர் மு.க ஸ்டாலினுக்கு திருமணமாகி நான்கே மாதத்தில் 22 வயதில் மிசா கைதியாக ஜெயிலில் இருந்தார். கிராமங்களில் கோபம் வந்துவிட்டால் ரொம்ப வேகமாக பேசுவார்கள் "நான் ஒருத்தனுக்கே பிறந்தவன் என்று.. அரசியலில் ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்ற திமுகவை தவிர வேறு எந்த கட்சிக்கும் கிடையாது" என ஆக்ரோஷமாக பேசியுள்ளார். ஆர் எஸ் பாரதியின் இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk RS Bharti controversial speech on MGR is a coward


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->