வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.!
new low pressure formed in bay of bengal
தமிழகத்தில் கடந்த 15-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. அதன்படி, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்தது. அந்த நேரத்தில் வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும், வட மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சியும் நிலவியது.
பின்னர் தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே வரும் போது மேலும் மழை இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுதினம் புயலாகவும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வலுவடைய உள்ளது என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலினால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்பதே தற்போது வரையிலான தகவலாக உள்ளது.
English Summary
new low pressure formed in bay of bengal