அவதூறு வழக்கில் திமுக ஆபாச பேச்சாளர் குடியாத்தம் குமரன் கைது!!
DMK speaker Gudiyatham Kumaran arrested in defamation case
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த திமுக தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் தனது youtube பக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விந்தியா ஆகியோரை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சென்னை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையையுமான விந்தியா திமுக தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் தன்னை ஆபாச வார்த்தைகளால் அவதூறாக பேசியதாக மீது புகார் அளித்திருந்தார்.
![](https://img.seithipunal.com/media/PicsArt_07-19-10.12.35-yj5vd.png)
அந்த புகாரின் பேரில் சென்னை மாநகர் போலீசார் இந்திய குற்றவியல் பிரிவு 294(b), 506, தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67 என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான விந்தியாவை ஆபாசமாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் தற்பொழுது சென்னை மாநகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
English Summary
DMK speaker Gudiyatham Kumaran arrested in defamation case