என்ன நடக்குது தமிழக அரசியலில் ..? விஜயுடன் எடப்பாடி கூட்டணியா..?! திரை மறைவில் நடக்கும் காரியங்கள்..!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் விஜயையும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் இணைக்கும் பாலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் இந்த கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழக அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது என்று கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். எப்போதும் மென்மையான அணுகுமுறையை கையாளும் விஜய், இம்முறை கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது பலரையும் யோசிக்க வைத்துள்ளது. 

அதே போல் முதல் ஆளாக இந்த சம்பவத்தில் தமிழக அரசின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்நிலையில், இன்று கூடிய சட்டசபை நிகழ்வில் ஆளுநர் அனுமதி அளித்த பிறகும் அவை நிகழ்வில் பங்கேற்காமல் வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, நேரடியாக கள்ளக்குறிச்சி சென்று பார்வையிட உள்ளதாகவும், மேலும் ஆளுநரிடம் இந்த விவகாரம் குறித்து நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனால் அதிமுக - தவெக இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர். முன்னதாக அதிமுகவை சேர்ந்தவர்கள் தவெக தலைவர் விஜயை அடிக்கடி பாராட்டு வருவதும் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Does TVK Leader Vijay And EPS Joining Hands In TN Politics


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->