அதைப்பற்றி பேசாதிங்க.. காங்கிரசை சாடிய உமர் அப்துல்லா! - Seithipunal
Seithipunal


தேர்தல் இயந்திரத்தைப் பயன்படுத்தி சில மாதங்களுக்கு பிறகு தோல்வியை சந்திக்கும்போது குறை கூறுகிறீர்கள்.இத்தகைய அணுகுமுறையை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுகாஷ்மீர் முதல் மந்திரியான உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 10 ஆண்டுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை ஒரு அணியாகவும், பா.ஜ.க. மற்றொரு அணியாகவும், கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்ற மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி தனித்தும் களம் கண்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ம் தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற்றது.

 மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், பா.ஜ.க. 29 இடங்களிலும், மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

காஷ்மீரைப் பொறுத்த அளவில் தேசிய மாநாடு கட்சிக்குத்தான் பெரிய வெற்றியாகும்.ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கு பிறகு மிகச்சிறப்பான முறையில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது உலகளவிலும், தேசிய அளவிலும் அதிக கவனம் பெற்றது.

இந்தநிலையில் காஷ்மீர் முதல் மந்திரியான உமர் அப்துல்லா தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் (காங்கிரஸ்) 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை பெறும்போது, அது கட்சிக்கு கிடைத்த வெற்றி என கொண்டாடுகிறீர்கள்.

அதே தேர்தல் இயந்திரத்தைப் பயன்படுத்தி சில மாதங்களுக்கு பிறகு தோல்வியை சந்திக்கும்போது குறை கூறுகிறீர்கள்.இத்தகைய அணுகுமுறையை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏற்காதவர்கள் என்றால் அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை நிலையில் இருக்கிறது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். அடிக்கடி கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தவேண்டும் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't talk about it Omar Abdullah slams Congress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->