தனது தோல்விக்கு பாராட்டு விழா நடத்தும் தமிழக அரசு! அதிரவைக்கும் பரபரப்பு பேட்டி!
Dr Anbumani Ramadoss Condemn to TNGovt for private School
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, "தனியார் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பாக பாராட்டு விழா நடக்க உள்ளது. இந்த விழாவை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 19 தனியார் பள்ளிகள் மட்டும் தான் இருந்தன. இன்று மூன்றில் இரண்டு விழுக்காடு தனியார் பள்ளிகள், மூன்றில் ஒன்றுதான் அரசு பள்ளிகள்.
தற்போது அரசு பள்ளிகளுக்கு மூடு விழா நடந்து கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. இது தமிழக அரசின் தோல்வி. கல்வி கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
இலவசமாக, தரமாக கல்வியை கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தனியார் பள்ளிகளை தமிழகம் முழுவதும் தொடங்க வைத்து, இன்று தனியார் பள்ளிகளுக்கே பாராட்டு விழா நடத்துவது என்பது, உங்களை நீங்களே திட்டிக் கொள்வதற்கு சமமானது.
அதாவது நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம், தமிழக அரசின் கல்வித்துறை தோற்றுவிட்டது, அதனால் தனியார் பள்ளிகளுக்கு நாங்கள் பாராட்டு விழா நடத்துகிறோம் என்று உங்களின் தோல்விக்கு பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
தமிழகத்தின் உரிமைகளை நாங்கள் எள்ளளவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. கோயம்புத்தூர், சென்னை மெட்ரோ திட்டத்திற்கான நிதியை நாங்கள் சண்டை போட்டு வாங்குவோம்.
மத்திய அரசு 48 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு எதுவும் வராதா என்ன? இதுவரைக்கும் தாக்கல் செய்யப்பட்ட ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் சொல்லி இருக்கிறார்களா? காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்யும் போது இவ்வளவு காலம் பட்ஜெட் போட்டு உள்ளது. அனைத்து மாநிலங்கள் பெயர்களையும் அவர்கள் சொல்லி இருக்கிறார்களா? இதெல்லாம் ஒரு பிரச்சனையா?
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை விட, இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் மூலம் தமிழகத்திற்கு கூடுதலான திட்டங்களும், கூடுதல் நிதி ஒதுக்கிடும் கொடுத்துள்ளார்கள்" என்று, அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
Dr Anbumani Ramadoss Condemn to TNGovt for private School