பாமக யாருடன் கூட்டணி? விடாத கேள்விகளுக்கு அசராமல் பதில் அளித்த அன்புமணி!  - Seithipunal
Seithipunal


தென் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, வருகின்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இருக்குமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "எங்களுடைய இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

அதற்கேற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது அமைப்போம்.  அதுவும் தேர்தலுக்கு முன்பாக ஆறு மாதங்கள் முன்பு அறிவிப்போம். தற்போது அவசரம்  இல்லை. அதனை அப்போது பார்த்துக் கொள்ளலாம். 

திமுக அரசை அதிகமாக பாராட்டுவதால், திமுகவுடன் கூட்டணி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, எந்த ஆட்சியாக இருந்தாலும் நல்லது செய்தால் பாராட்டுவோம், கெட்டது செய்தால் போராடுவோம்.

திமுக அதிமுக வேறுபாடு கிடையாது. இரண்டு கட்சிகளுமே ஆட்சி செய்தால், சரியான திட்டங்களை வரவேற்போம், தவறான திட்டங்களை எதிர்ப்போம், போராடுவோம். திமுக ஆட்சியிலும் தற்பொழுது நல்ல திட்டங்களை வரவேற்கிறோம். மோசமான திட்டங்கள் வந்தால் கடுமையான போராட்டங்களையும் நாங்கள் நடத்தி இருக்கிறோம்.

எங்களுடைய கோரிக்கையின் பேரில்தான் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்தை கொண்டு வந்தார்கள். அதேபோல அதிமுக ஆட்சி காலத்தில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அமைக்கப்பட வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையை அதிமுக கொண்டு வந்தார்கள். 

இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டை 55 ஆண்டுகள் ஆட்சி செய்து விட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் போதும் என்ற தேக்கநிலை மக்கள் மனதில் வந்திருக்கிறது. எனவே மக்கள் எதிர்ப்பார்க்கும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி வளர்ந்திருக்கிறது.

தென் மாவட்டங்களில் பாமகவை பலப்படுத்துவதற்காக இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்றேன். இன்றைய சூழ்நிலையில் கட்சியை பலப்படுத்துவதற்காக செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறோம். மிக அதிக இளைஞர்களை கொண்ட கட்சி பாமக. எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் ஆர்வமாக வந்து  இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

அது எங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக பாமக இருக்கிறது.  கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஒன்றரை ஆண்டுகள் தேர்தலுக்கு இருப்பதால், தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு பேசிக்கலாம் என்றார் அன்புமணி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say about PMK Alliance 4123


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->