தைப்பொங்கல் திருநாளில் இயற்கையை காக்க தமிழர்களாக உறுதியேற்போம் - அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


தைப்பொங்கல் திருநாளில் இயற்கையை காக்க தமிழர்களாக உறுதியேற்போம் என்று, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில், "உழவுக்கு வணக்கம் செலுத்தும் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும்  தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவிழாக்களின் திருவிழா என்பது பொங்கல் திருவிழா தான். தமிழர்களின் வாழ்வு, வாழ்வாதாரம், கலாச்சாரம், இயற்கை வழிபாடு, உழவுத் தொழிலுக்கு உதவிய இயற்கை தொடங்கி கால்நடைகள் வரை அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் பண்பாடு, வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு, நண்பர்கள் முதல் உறவுகள் வரை அனைவரும் ஒன்று கூடல் உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பது தான் தமிழர் திருநாளின் சிறப்பு ஆகும். 

பொதுவாகவே திருவிழாக்கள் கடந்த கால நிகழ்வுகளையும், வெற்றிகளையும் நினைவு கூறவும், தெய்வங்களை வணங்கவும் கொண்டாடப்படுபவை ஆகும். ஆனால், பொங்கல் திருநாள் மட்டும் இயற்கையை வணங்கவும், நன்றி தெரிவிக்கவும் கொண்டாடப்படுகிறது.

உலகில் இயற்கையை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் தான். பொங்கல் திருநாளில் இயற்கையை வனங்கும் நாம், அதை போற்றவும், காக்கவும் வேண்டும். பொங்கல் திருநாள் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களில் இயற்கையை காக்க வேண்டியன் அவசியத்தை வலியுறுத்துவதும் ஒன்றாக இருக்க வேண்டும். 

இயற்கையை பாதுகாக்காததன் விளைவைத் தான் ஒட்டுமொத்த உலகமும் காலநிலை மாற்றம் என்ற பெயரில் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. கரிமவாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், பூகோள  வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்காமல், கொடுமையானதாக மாறிவிடும் ஆபத்து அதிகரித்து வருகிறது.

தைப்பொங்கல் எப்போதும் நன்மைகளை மட்டுமே வழங்கும். அந்த வகையில் தமிழர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகுக்கும் அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களையும், வளங்களையும் தைத்திங்களும், தமிழ்ப்புத்தாண்டும் வழங்க வேண்டும். 

அத்துடன் நம்மை வாழவைக்கும் இயற்கைக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில், தமிழர்கள் அனைவரும் இயற்கையை காக்க தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நாளில் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Wish Pongal 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->