இன்று திராவிட மாடல்..! நாளை திராவிட நாடா? டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சந்தேகம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் 2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக அரசின் உரையை ஆளுநர் ரவி முழுமையாக வாசிக்காமல் ஒரு சில வரிகளை தவிர்த்தது சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநரின் உரையில் இடம்பெற்றுள்ள வரிகளை முழுமையாக அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என ஆளுநரின் செயலுக்கு எதிராக பொருள்படும்படி தீர்மானத்தை கொண்டு வந்தார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். குறிப்பாக ஆளுநர் உரையில் 65வது பத்தியில் சமூக நீதி, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அண்ணா, கலைஞர் போன்ற வார்த்தைகளுடன் "திராவிட மாடல் ஆட்சி" என்ற வார்த்தையும் இடம்பெற்று இருந்தது. இந்த பத்தியை முழுவதும் ஆளுநர் ஆர்.என் ரவி வாசிக்காமல் தவிர்த்தார்.

இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் "ஆளுநர் உரையில் 'திராவிட மாடல்' பற்றி குறிப்பிடாததற்கு முதல்வரும் அடிவருடிகளும் கொந்தளிக்கிறார்களே..? இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான திமுகவின் திராவிட நாடு கோரிக்கையை அச்சிட்டு கொடுத்தாலும் ஆளுநர் அதையும் அப்படியே படிக்க வேண்டுமா..? இன்று திராவிட மாடல்..! நாளை திராவிட நாடா? என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Krishnasamy review the Tamil Nadu Governor speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->