உதயநிதியை மன்னிக்கக்கூடாது, தண்டிக்கவேண்டும் - தமிழகத்தில் எழுந்த குரல்! - Seithipunal
Seithipunal


சனாதன விவகாரத்தில், அமைச்சர் உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதியவேண்டும் என்று, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், "திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் சனாதனத்தைப் பற்றியே பேசி வருகின்றன.

இந்திய அளவில் அமைச்சர் உதயநிதியின் சர்ச்சை பேச்சு பிரச்சினையாக மாறி உள்ளது. சனாதனம் என்றல் என்னவென்றே தெரியாமல் உதயநிதி பேசி உள்ளார். 

இந்து மதத்தின் ஆன்மாவாக உள்ள சனாதனம், 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கோட்பாடு. இந்த பூமியில் இந்து மதம் போல வேறு எந்தவொரு மதமும் இல்லை.

சுய கட்டுப்பாடு ஒழுக்கத்தை கற்றுத்தருகிறது. 1950 அரசியல் சாசனத்தின்படி, அனைவரும் சமம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

சனாதனத்தை ஏற்றுக் கொண்டதால் தான் கருணாநிதி, முக. ஸ்டாலின், உதயநிதி பதவிகள் வகிக்க முடிந்தது.

இப்படி ஒரு இந்துவாக இருந்து கொண்டே அமைச்சர் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் தவறாக பேசி உள்ளனர். 

திட்டமிட்டு சனாதனம் குறித்து பேசிய உதயநிதியை மன்னிக்கக்கூடாது, அவரை தண்டிக்கவேண்டும். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. அதை மறைக்கவே சர்ச்சை பேச்சுக்களை பேசுகின்றனர். 

நீதிமன்றங்கள் தாமாக முன் வந்து உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதியவேண்டும்" என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Krishnasamy say About Udhay sanatana speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->