செங்கல்பட்டு பாமக நிர்வாகி கொலை! டாக்டர் இராமதாஸ் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு நகர பாமக செயலாளர் நாகராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், கொலையாளிகளை உடனே கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே மலர் வணிகம் செய்து வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் பூக்கடை நாகராஜ் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டதை அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், பா.ம.க.வினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும்,  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பூக்கடை நாகராஜ் அவரது இளம் வயதில் இருந்தே கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தவர். அப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக போராடியவர். அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் பெற்றவர். சிறந்த தொண்டர். சாதிக்க வேண்டிய அவர், இளம் வயதிலேயே நம்மை விட்டு பிரிந்தததை தாங்க முடியவில்லை.

சில வாரங்களுக்கு முன் மறைமலை நகர் பகுதியில் வன்னியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் காட்டூர் காளிதாசன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு காரணமான அனைவரையும்  கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். 

அதை செய்திருந்தால் கூலிப்படைகளுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கும். அதை செய்ய காவல்துறை தவறியதால் தான் பூக்கடை நாகராஜை படுகொலை செய்யும் துணிவு கூலிப்படைக்கு ஏற்பட்டிருக்கிறது. அவரது கொலைக்கு காரணமானவர்கள் யாராக  இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும்" என்று  மருத்துவர் இராமதாஸ் வலியறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Condemn to Chengalpattu PMK Nagaraj Murder


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->