மாங்காடு பலி! எச்சரித்தும் அலட்சியம் தொடர்வது சரியல்ல - வேதனையில் டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


மாங்காட்டில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு: பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று,  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியூறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னையை அடுத்த மாங்காடு நகரத்தில், பணிகள் முடிக்கப்படாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து லட்சுமிபதி என்ற தனியார் நிறுவன ஊழியர் இன்று காலை உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தோண்டப்பட்ட  மழை நீர் வடிகால் பள்ளங்கள் மூடப்படாததால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும். மழைநீர் வடிகால் பணிகளை  முடிக்க வேண்டும் அல்லது பள்ளங்கள் மூடப்பட வேண்டும் என தொடர்ந்து எச்சரித்தும் கூட அலட்சியம் தொடர்வது சரியல்ல!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை. அடுத்து வரும் நாட்களில் மழை உச்சத்தை அடையும் போதும் இப்போதிருப்பது போன்ற பாதுகாப்பற்ற நிலையே  தொடர்ந்தால் இன்னும் அதிகமான விபத்துகளும்,  உயிரிழப்புகளும் ஏற்படும் ஆபத்தை அரசு உணர வேண்டும்!

பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகளில் தடுப்பரண்களை வைப்பது மட்டுமே பாதுகாப்பு அல்ல. உடனடியாக முடிக்க வாய்ப்புள்ள பணிகளை மழையில்லாத நாள்களில் நிறைவு செய்ய வேண்டும். அத்தகைய வாய்ப்பில்லாத மழைநீர் வடிகால் பள்ளங்களை உடனடியாக மூடி விபத்துகளை தவிர்க்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Mankadu Accident Death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->