தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் 2வது முறையாக குற்றச்சாட்டு - தமிழக அரசு விளக்கமளிக்க மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையா? தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்துவதில் பிரச்சினைகளை சந்திக்கிறோம்; அதனால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன; முதலமைச்சர் இத்திட்டங்களை ஆய்வு செய்து, ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது!

தமிழக அரசு மீது மத்திய நெடுஞ்சாலைத் துறை இத்தகைய குற்றச்சாட்டை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கூறியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழகம் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கடுமையானது. இதுகுறித்த உண்மை நிலையை தமிழக அரசு விளக்க வேண்டும்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகள் மிகவும் அவசியமானவை. நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கிக் கிடக்காமல் விரைந்து செயல்படுத்தி முடிக்கப்படுவதை  மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். எந்தத் திட்டப்பணிகளும் நிறுத்தி வைக்கப்படக்கூடாது.

சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச்சாலை உழவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் என்பதால் அத்திட்டம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும் கூட, அதை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும்; அத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About TN NH Road Word Stopped Issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->