இன்று மட்டுமல்ல, எந்நாளும் குழந்தைகளை கொண்டாடுவோம் - டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


இன்று மட்டுமல்ல... எந்நாளும் குழந்தைகளை கொண்டாடுவோம் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில், "குழந்தைகள் தான் பல தருணங்களில் நமக்கு பெற்றோர்கள்.  அவர்கள் தான்  மகிழ்ச்சியின் ஊற்றுகள்.  அவர்களின் தழுவல்கள் தான் நமது மனக்காயங்களை போக்கும் மருந்துகள். என்னைச் சுற்றி குழந்தைகள் இருந்தால் நானே குழந்தையாகி விடுவேன். அவர்களை  இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் கொண்டாடுவோம்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியில், "குழந்தைகள் மீது பேரன்பு காட்டிய பெருந்தகை ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் நாள். குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். கள்ளங்கபடமற்ற உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள். இன்றும், என்றும் அவர்களை போற்றுவதுடன்,  அவர்களைப் போல உளத்தூய்மையுடனும், கவலையின்றியும் வாழ முயல்வோம்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "நம்பிக்கை நட்சத்திரங்களாம் குழந்தைச் செல்வங்களுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்...”  என்ற மொழிக்கேற்ப குழந்தைகளை எல்லா நாளும் கொண்டாடி மகிழ்வோம்.

சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி எல்லாக் குழந்தைகளும் சமவாய்ப்புகளோடு வளர்வதற்கும், அதன்வழியாக நாட்டின் எதிர்காலத்தைச் சிறப்பாக உருவாக்குவதற்கும் உழைத்திட குழந்தைகள் நாளில் உறுதியேற்றிடுவோம்." என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss Wish Childrens day 2022


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->