ஆடுதுறை பேரூராட்சித் தலைவராக வெற்றி பெற்ற ம.க.ஸ்டாலினுக்கு., பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


ஆடுதுறை பேரூராட்சித் தலைவராக வெற்றி பெற்ற ம.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், "தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின்  ம.க.ஸ்டாலினுக்கும், துணைத் தலைவராக தேர்வான கமலாவுக்கும் வாழ்த்துகள்.  அவர்களின் வெற்றியை சாத்தியமாக்கிய அனைவருக்கும்  பாராட்டுகள்.

ஆடுதுறை  பேரூராட்சித் தலைவர் பதவிக்கு மார்ச்  4-ஆம் நடக்கவிருந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அது சாதாரணமான வெற்றியாக இருந்திருக்கும். ஆனால், சதிகளையும், தடைகளையும்  சட்டப் போராட்டத்தின் மூலம் தகர்த்து பெற்றிருக்கும் வெற்றி  சிறப்பான வெற்றியாக  மாறியிருக்கிறது.

பேரூராட்சித் தலைவர் பதவிக்கு தேர்வாகியுள்ள ம.க.ஸ்டாலினும், பாட்டாளி மக்கள் கட்சியின் பிற உறுப்பினர்களும் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களும்  பாராட்டும் வகையில் ஆடுதுறையின் வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்ற வேண்டும் என்று  அறிவுறுத்துகிறேன்"

இவ்வாறு அந்த டிவிட்டர் பதிவில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Wish Ma Ka Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->