புயல் பாதிப்பு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்..பாமக வழங்கியது!
Essential commodities for cyclone affected people. Provided by PMK
புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதிக்குட்பட்ட இடையார்பாளையம் என் ஆர் நகர் பகுதிகளில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பொங்கல் கொண்டாடும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில அமைப்பாளர் கோ. கணபதி வீட்டு உபயோகத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
கடந்த மதம் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டன.மேலும் அதிக பாதிப்படைந்த பகுதிகளை கண்டறிந்து அரசியல் கட்சினரும்,சமூகஅமைப்பினரும் பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்துவருகின்றனர்.இந்தநிலையில் புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதிக்குட்பட்ட இடையார்பாளையம் என் ஆர் நகர் பகுதிகளில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பொங்கல் கொண்டாடும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில அமைப்பாளர் கோ. கணபதி வீட்டு உபயோகத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
பெஞ்சல் புயலால் சங்கராபரணி ஆற்றங்கரை ஓரமுள்ள என் ஆர் நகரில் வெள்ளம் சூழ்ந்து முழுமையாக பாதிக்கப்பட்டது. அந்த பகுதி மக்கள் பொங்கல் கொண்டாடும் விதமாக அந்த பகுதி மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில அமைப்பாளர் கோ. கணபதி அவர்கள் சொந்த செலவில் 3 கிலோ அரிசி, மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான அத்தியாவசிய பத்து பொருட்கள் அடங்கிய பேக்கிங் (பேஸ்ட், பிரஷ் குளியல, சோப்பு, வாஷிங் பவுடர், பினாயில், ப்ளீச்சிங் பவுடர், உட்பட 10 பொருட்கள்) 250 குடும்பங்களுக்கு இலவசமாக வீடு வீடாக வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞர் சங்க செயலாளர் சேதுபதி, பிரதீப், என் ஆர் நகர் கிளை செயலாளர் ராஜா ,உழவர் பேரிக்க மாநில செயலாளர் மணிபாலன் ,தொகுதி வன்னியர் சங்க செயலாளர் ஆனந்தராஜ், பாட்டாளி தொழிற்சங்கம் பன்னீர்செல்வம், மணவெளி தொகுதி வன்னியர் சங்க தலைவர் மணிரத்தினம், ஊசுடு தொகுதி செயலாளர் குப்புசாமி, மாணவர் சங்க நிர்வாகி திவாகர், மற்றும் மணவெளி தொகுதி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
English Summary
Essential commodities for cyclone affected people. Provided by PMK