தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்டெடுக்க உறுதி ஏற்க வேண்டும் - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறைகூவல்!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் : தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்டெடுக்க உறுதி ஏற்க வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர்  இராமதாஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவரின் செய்திக்குறிப்பில், "மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி  தான் நமக்கு  தமிழ்நாடு நாள்.  இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும்,  தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். அது தான் தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள தமிழர்கள் அநீதிகளை எதிர்கொள்வதற்கும், தமிழகத்தின் பல உரிமைகள் பறிபோகவும்  காரணமாகும்.  நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியேற்போம்.

தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பு தமிழர்களின் மாநிலமாக 01.11.1956 அன்று  நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு என்ற பெயரை அறிஞர் அண்ணா 1969-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி தான்  சூட்டினார். அந்த நாளையும் அதற்குரிய சிறப்புடன்  கொண்டாட அரசு முன்வர வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Wish TamilNadu Day 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->