மூன்றாவது முறையாக நடந்த அதிர்ச்சி சம்பவம்., வேதனையில் அன்புமணி இராமதாஸ்.! தமிழக அரசுக்கு அவசர கோரிக்கை.!
DrAnbumaniRamadoss Say About debt harassment Suicide rise
கடன் தொல்லையால் அதிகரிக்கும் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சசரும், பாமக இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் தாய், தந்தை, மகன் என மூவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. திசம்பர் மாதத்தில் கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை செய்து கொள்வது இது மூன்றாவது நிகழ்வு ஆகும்.
கடன் தொல்லை காரணமாக தஞ்சாவூர் ரெட்டிப்பாளையத்தில் தொழிலதிபர் ஒருவர் மனைவி மகனுடனும், இராணிப்பேட்டை காவேரிப்பாக்கத்தில் பேராசிரியர் ஒருவர் மனைவி மகனுடனும் தற்கொலை செய்து கொண்ட சோகம் நடப்பு திசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடந்தது. இவை தடுக்கப்பட வேண்டும்.
தீர்க்க முடியாத கடன் தொல்லையால் மன உளைச்சலும், அவமானமும் ஏற்படும் போது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுவது இயல்பானது தான். ஏற்கனவே தற்கொலையில் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தில் இத்தகைய நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும்.
கந்து வட்டி உள்ளிட்ட தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்களின் சிக்கலைக் கேட்டு தீர்வு வழங்க, ஒரு நிலையான சட்டப்பூர்வ அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு மனநல கலந்தாய்வு வழங்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
English Summary
DrAnbumaniRamadoss Say About debt harassment Suicide rise