கவனச் சிதறல்கள் இல்லாமல் தேர்வுகளை எழுதி, அதிக மதிப்பெண்களை பெற்று வாழ்க்கையில் சாதிக்க வாழ்த்துகள் - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


10, 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவச் செல்வங்கள் சாதிக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் டிவிட்டர் செய்திக்குறிப்பில், 

"தமிழ்நாடு மற்றும் புதுவையில்  நாளை தொடங்கும்  12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை மறுநாள் தொடங்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதும் சுமார் 18 லட்சம்  மாணவ, மாணவியருக்கும்  எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

\

இந்த இரு பொதுத்தேர்வுகள் தான் உங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும், முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக அமையக்கூடியவையாகும். ஆகவே  வழக்கமான தேர்வுகளை விட இந்தத் தேர்வுகளுக்கு கடுமையாக உழைக்க வேண்டும்; கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்!

10, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது தான் முதல் பொதுத்தேர்வு என்பதால் பதற்றம் தேவையில்லை. கவனச் சிதறல்கள் இல்லாமல் தேர்வுகளை எழுதி, அதிக மதிப்பெண்களை பெற்று வாழ்க்கையில் சாதிக்க  மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துகள்!

இவ்வாறு அந்த டிவிட்டர் செய்திக்குறிப்பில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrRamadoss School Exam wish


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->