#BREAKING: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


திருவான்மியூர், வேளாங்கண்ணி கடற்கரைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதையை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "முதலமைச்சர் உத்தரவின்பேரில், மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதையை 2 ஆண்டுகள் முன்பு அமைக்கப்பட்டது.  அந்த மரப்பாதை வழியாக  ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மெரினாவில் தினசரி கடற்கரை வரை சென்று கடல் அலையில் கால் நனைத்து மகிழ்கின்றனர்.

இதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையின் அடிப்படையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை அமைக்க நம் முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் அடிக்கல் நாட்டினார்கள்.

அதன்பேரில், ரூ.1.61 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்ற பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம். பெசன்ட் நகர் கடற்கரையில் மரப்பாதை அமைக்கும் பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்து மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அதிகாரிகளை அறிவுறுத்தினோம்.

மேலும், முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், திருவான்மியூர் மற்றும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதையை அமைக்க, நம் அரசு எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியிட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DyCM Announce


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->