நாடாளுமன்றத் தேர்தல் || தென் மாநில அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


வரும் 2024 ஆம் ஆண்டு மத்தியில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில தேர்தல் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் சென்னையில் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அந்தமான், லட்சத்தீவுகள், புதுச்சேரி யூனியன் பிரதேசங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EC Clconsulting with southern state officials tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->