தேர்தல் முடிவு: தவறானது - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி! - Seithipunal
Seithipunal


ஹரியானாவில் உள்ள மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஹரியானா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் போதும் என்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சி 48 க்கும் அதிகமான இடங்களில் தற்போது முன்னிலையில் இருந்து வருகிறது. இதன் மூலம் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைவது உறுதியவிட்டது.

இதுபோல் ஜம்மு- காஷ்மீரில் உள்ள மொத்தம் 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் 18 மற்றும் 25 தேதிகளிலும், கடந்த ஒன்றாம் தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் முன்னிலை பெற்று வருகின்றன . 

இதற்கிடையே, தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் தாமதமாக பதிவேற்றம் செய்கிறது என்று, காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இத்தகைய தகவல்கள் தவறானவை என்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

#HariyanaElectionResult


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EC reply to Congress Election 2024


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->