செத்தாலும் தனிச்சின்னம்.. அதுக்குன்னு "தீப்பெட்டி" சின்னமா ஒதுக்கனும்.!!
ECI allocate Matchbox symbol to mdmk durai Vaiko
திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சின்னம் கிடைக்காவிட்டால் துரை வைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்.
அதுதான் எங்களுடைய எண்ணமும், எங்களுடைய எதிர்பார்ப்பும் என பேசியது வேட்பாளர் துரை வைகோவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே கூட்டத்தில் பேசிய துரை வைகோ செத்தாலும் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என ஆவேசமாக பேசினார்.
இதனால் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் மகேஷ், ரகுபதி ஆகியோரின் முகம் வாடியது. இந்த நிலையில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி விண்ணப்பித்ததோடு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
மதிமுகவின் மனு மீது இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில் மதிமுகவின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
அதன் பிறகு தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என வேட்பாளர் துரை வைகோ அறிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. செத்தாலும் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என கூறிய துறை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
English Summary
ECI allocate Matchbox symbol to mdmk durai Vaiko