செந்தில்பாலாஜி போலவே சிக்கிய சித்தராமையா! அதே டிவிஸ்ட்.. நிலத்தை திருப்பித் தருகிறேன்! - Seithipunal
Seithipunal


கடந்த 2021ம் ஆண்டு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தால் 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக புகாரின் பேரில், முதலமைச்சர்  சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் அனுமதி வழங்கினார்.

ஆளுநர் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில்  சித்தராமையா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, முடா ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த  புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதது.

இதனையடுத்து, பழைய சி.ஆர்.பி.சி. சட்டப்பிரிவில் மைசூர் லோக் ஆயுக்தாவில் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, இந்த வழக்கை முன்வைத்து அமலாக்கத்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சித்தராமையா மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது.

இந்நிலையில், மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தால் பெறப்பட்ட 14 மனைகளை, திரும்பி ஒப்படைப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி கடிதம் எழுதியுள்ளார். 

மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில் சித்தராமையா முடிவு செய்து உள்ளார்.

மேலும், 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஒருமுறை கூட தவறு செய்ததில்லை. எனது மனைவியை வைத்து என்னை அரசியல் சூழ்ச்சியில் சிக்க வைக்க முயற்சி என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

14 மனைகளை திரும்பி ஒப்படைப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி கடிதம் எழுதி உள்ளதை சுட்டி காட்டி, பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, இது "செந்தில்பாலாஜி மாடல்" என்று விமர்சித்துள்ளார்.

போக்குவரத்துறையில் வேலைவாங்கி தருவதாக பெற்ற பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாக செந்தில்பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் சொன்னதாக சொல்லப்படுகிறது, இதனை வைத்தே நாராயணன் திருப்பதி, இது "செந்தில்பாலாஜி மாடல்" என்று விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED Case File against Karnataka CM Siddaramaiah Congress DMK Senthilbalaji


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->