ஒரு கோடியை நெருங்கும் மெட்ரோ ரயில் பயணம்! நன்றி தெரிவித்த நிர்வாகம்! - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 92.77 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக செப்டம்பர் 6ம் தேதி மட்டும் 3.74 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84.33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95.35,019 பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 06.09.2024 அன்று 3,74,087 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2024, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 30,99,397 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 7.319  பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 7,149 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40.73.640 பயணிகள் (Online QR 1.76,890; Paper QR 21.91,054; Static QR 2.58,952; Whatsapp - 5,92,360; Paytm 4,41,609; PhonePe - 3,30,305; ONDC - 82,470), மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை பயன்படுத்தி 20,90,192 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Metro Train Sep Report


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->