அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3வது சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.!! - Seithipunal
Seithipunal


டெல்லி அரசின் மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் சிங், டெல்லி முன்னாள் கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது சிறையில் உள்ளனர். இந்நிலையில் ஜாமீன் கோரி சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனு இன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை 3வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மீண்டும் 2வது முறையாக கடந்த டிசம்பர் 18ம் தேதி சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், அமலாக்கத்துறை நேற்று கெஜ்ரிவாலுக்கு 3வது முறையாக சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ed sent 3rd summons to Arvind Kejriwa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->