முடிவுகளை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் மெத்தனம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


இந்திய பாராளுமன்ற தேர்தல் தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று உலக நாடுகளால் பாராட்டப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் ஜூன் 1ம் தேதி தான் முடிவடைந்தது.

ஏழு கட்டங்களாக நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதிலும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 294 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  இதில் பாஜக மட்டும் தனித்து 235 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் காங்கிரஸ் கூட்டணி 230 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதில் காங்கிரஸ் மட்டும் 99 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சாட்டி பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், " வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் மெத்தனம் காட்டுகிறது. கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் மிகவும் மந்தகதியில் தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன. 

யாருடைய உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் முடிவுகளை தாமதிக்கிறது" என்று ஜெய்ராம் ரமேஷ் தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Comission is Being apathy in Announcing Results Congress Complain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->