ஜாதி,மதம் சார்ந்த பிரச்சாரம் செய்வது தவிர்க்குமாறு பாஜக, காங்கிரஸ்க்கு தேர்தல் ஆணையம் அறிவுரை!!
Election Commission advises BJP Congress to avoid campaigning based on caste and religion
ஜாதி,மொழி, மத அடிப்படையில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு பாஜக, காங்கிரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்திவுள்ளது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. பிரச்சாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இரு கூட்டணி தலைவர்களும் மாறி மாறி வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி முஸ்லீம் இட ஒதுக்கீட்டை விமர்சித்து இருந்தார். அதனை எதிர்த்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜகவிற்கு இந்து முஸ்லிம் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்று சாதி இருந்தார். அதனைத் தொடர்ந்து, பிரச்சாரத்தில் தொடர்ந்து வார்த்தையை போல் நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரக் கூட்டத்தில் மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசுவதாக தேர்தல் ஆணையதில் புகார் அளித்தது. இதுகுறித்து பதில் அளிக்கும் மாறு பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
ஜே.பி நட்டாவின் விளக்கத்தை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் பாஜக நட்சத்திர பேச்சாளர்களை மதப் பிரிவினைவாத பிரச்சாரத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி மீதும் பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. காங்கிரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் பொருளாதார அமைப்பு குறித்து மக்களை பிளவுபடுத்தக்கூடிய அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் அவர்களின் பேச்சாளர்களும் நாட்டின் மீது அக்கறை கொண்டு பேச்சுக்களை சரி செய்து கொள்ளுமாறும் ஜாதி, மத அடிப்படையில் பிரச்சாரம் செய்வதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறித்தி உள்ளது.
English Summary
Election Commission advises BJP Congress to avoid campaigning based on caste and religion