#BigNews: வயநாடு இடைத்தேர்தல்.. ராகுலின் தகுதி நீக்கம்.. ட்விஸ்ட் வைத்து பதிலளித்த தேர்தல் ஆணையர்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

சமீபத்தில் ராகுல் காந்தி எம்.பி மீதான குற்ற வழக்கு நிரூபிக்கப்பட்டு ராகுல் காந்தியின் எம்.பி பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே, வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

கர்நாடக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் அதே நேரத்தில் வயநாடு இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், இது குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், " வயநாடு இடைத்தேர்தலை நடத்த 6 மாதங்கள் சட்டம் அவகாசம் கொடுத்துள்ளது. விசாரணை நீதிமன்றமும் நீதித்துறை தீர்வுக்காக 30 நாட்கள் அவகாசம் அளித்து இருக்கின்றது. 

எனவே, வயநாடு இடைத்தேர்தலுக்கு அவசரம் எதுவுமில்லை."என்று விளக்கமளித்துள்ளார். அதாவது விசாரணை நீதிமன்றம் நீதித்துறை தீர்வுக்காக 30 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளதாக அவர் மேற்க்கோள் காட்டி பேசி இருப்பது ராகுல் காந்தி வழக்கில் திருப்பம் ஏற்ப்பட வாய்ப்புள்ளதை குறிப்பதாக அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election commissioner rajiv Kumar about vayanad By Election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->