#BigBreaking | வாரணாசியில் மோடி பின்னடைவு! அதிர்ச்சியில் பாஜகவினர்!
Election Results 2024 Varanasi Vote Counting
திருச்சி மக்கள் தொகுதியில் மதிமுக வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார். முதற்கட்ட நிலவரப்படி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்தியாவின் பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், நாடு முழுவதும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலக்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து EVM எந்திரங்களில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
தற்போது வரை 542 தொகுதிகளில் 513 தொகுதிகள் முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி பாஜக 279 இடங்களிலும், காங்கிரஸ் 215 இடங்களிலும், மற்ற கட்சிகள் 21 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி பின்னடைவு அடைந்துள்ளார்.
பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அஜய் ராய் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
English Summary
Election Results 2024 Varanasi Vote Counting