உடனே வெளியேறுங்கள்., இந்தியர்களுக்கு தூதரகம் விடுத்த எச்சரிக்கை.!
Embassy warns Indians
உக்ரைனின் கார்கிவ் பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள் என்று உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு கருதி உடனடியாக இந்தியர்களை வெளியேறும்படி, உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"கார்கிவ் பகுதியில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். கார்கிவ் பகுதியில் உள்ள இந்தியர்கள் பெசோஷின், பாபாயி உள்ளிட்ட பகுதிகளை நோக்கி செல்ல வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் உக்ரைன் நாட்டு நேரப்படி இன்று மாலை 6 மணிக்குள் கார்கிவ் நகரை விட்டு வெளியேற இந்தியர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது,
மோதல் நடைபெறும் கார்கிவ் உள்ளிட்ட பிற நகரங்களில் உள்ள இந்தியர்களை மீட்க வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை செயலாளர் தூதர் வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரஷ்ய படை தாக்குதலில் உயிரிழந்துள்ள மாணவர் பஞ்சாப் மாநிலம் பர்னாலாவை சேர்ந்தவர் என்றும், அந்த மாணவரின் பெயர் சந்தன் ஜிந்தால் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.