#BigBreaking || ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்.?# டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும், தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது (தகவல்) பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிக்கை பத்திரிக்கையை மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு நிலத்தை விற்றதாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

 

இது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி ஒரு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையும் விசாரணை செய்து வருகிறது.

இந்த விசாரணைக்காக ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே அமலாக்கத்துறை இதுதொடர்பாக விசாரணை நடத்தி இருந்தாலும், முதல் முறையாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் அழைத்து விசாரணை நடத்த சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ANI செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2015ஆம் ஆண்டு விசாரணை நிறுவனத்தால் மூடப்பட்ட நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல் காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது: 

1942ல் நேஷனல் ஹெரால்டு நாளிதழை ஆரம்பித்து, அப்போது ஆங்கிலேயர்கள் அதை அடக்க முயன்றனர், இன்று மோடி அரசும் அதையே செய்கிறது & இதற்கு ED பயன்படுத்தப்படுகிறது. எங்கள் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது: காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா


ANI ஆங்கிலத்தில் செய்தி : Enforcement Directorate summons Congress interim president Sonia Gandhi and party MP Rahul Gandhi over the National Herald case, which was closed by the investigating agency in 2015: Official Sources
Started the National Herald newspaper in 1942, at that time the British tried to suppress it, today Modi govt is also doing the same & ED is being used for this. ED has given notice to our president Sonia Gandhi and Rahul Gandhi: Congress leader Randeep Surjewala
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enforcement department summons Rahul Gandhi and Sonia Gandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->