எம்ஜிஆர் பங்களாவை குறி வைக்கும் இபிஎஸ், சசிகலா! எம்ஜிஆர் குடும்பத்தில் ஏற்பட்ட புது குழப்பம்! - Seithipunal
Seithipunal


இரண்டு தரப்புக்கும் எவ்வாறு அனுமதி அளிப்பது என போலீஸ் குழப்பம்!

அதிமுக, கட்சியின் பொன்விழா நிகழ்ச்சி வருகிற 17ம் தேதி அதிமுக விமர்சியாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா தரப்புகள் மும்முரமாக செய்து வருகின்றன. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா மூவரும், மூன்று மூன்று வழிகளில் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்ள மும்முறமாக செயல்பட்டு வருகின்றனர்.


ஓபிஎஸ் அணியினர் சென்னையில் தி.நகரில் இருக்கும் எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக கொடியேற்றி கொண்டாட முடிவு செய்துள்ளனர். அவர்கள்17-10-2022 அன்று காலை 9 மணியளவில் சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.நினைவிடத்திற்குச் சென்று அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். இதனை ஓபிஎஸ் தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டு அழைப்பும் விடுத்திருந்தார்.

 சசிகலா தரப்பினர் சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளி வளாகத்தில் கொண்டாட அனுமதி கேட்ட நிலையில் பள்ளியின் நிர்வாகியான லதா ராஜேந்திரனும் அவரின் வாரிசுகளும் அனுமதி தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதே  தோட்டத்தில் எம்ஜிஆர் பங்களாவில் வசிக்கும் லதாவின் சகோதரி சுதா விஜயனிடம் பொன்விழாவை கொண்டாட அனுமதி கொடுக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் முடியாது என சொன்னவர்கள் பிறகு மனமிறங்கிய சுதா விஜயன், பங்களா வாசலில் விழாவை நடத்திக் கொள்ள அனுமதி தந்துள்ளதாக தெரிய வருகிறது.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை அடையாறு பகுதியில் உள்ள எம்ஜிஆர்-ஜானகி அம்மாள் கல்லூரி வளாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டி கொண்டாட வேண்டும் என நினைத்திருந்தார். பள்ளி கல்லூரி வளாகத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி ஆகியவை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று அரசாணை உள்ளது. இந்த கல்லூரி நிர்வாகம் எம்ஜிஆரின் குடும்பத்தினரான லதாராஜேந்திரன், மகனான குமார் ராஜேந்திரனின் கையில் உள்ளது. அவர் சசிகலா அணியில் உள்ளார். எனினும் எம்ஜிஆர் தோட்டத்தில் எம்ஜிஆர் பெயரில் உள்ள பள்ளிக்கூட குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்க விரும்புகிறோம். அதற்கு அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. பள்ளி தரப்பிலிருந்து17, 18 இரண்டு நாட்களும் விளையாட்டு போட்டிகள் இருப்பதால் 19-ந்தேதி வேண்டுமானால் அனுமதி தருகிறோம் என தெரிவித்துள்ளனர். ஆனால் இபிஎஸ் தரப்பு 17-ந்தேதி வேண்டும் கேட்டதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இபிஎஸ் தரப்பு எம்ஜிஆர் பங்களாவில் இருக்கும் மற்றொரு நபரான கீதா மதுமோகனிடம் அனுமதி கேட்டுள்ளனர். சென்னை புறநகர் மாவட்ட அதிமுக பிரமுகர் காமராஜ் மூலம் இந்த அனுமதியை கேட்டதால் அனுமதி வழங்கியுள்ளார் கீதா மதுமோகன். இந்த அனுமதி கிடைத்ததும் எடப்பாடி பழனிச்சாமியின் வருகையின் போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் கடிதம் வழங்கியுள்ளார் காமராஜ்.

அக்டோபர் 17-ந்தேதி எம்ஜிஆர் தோட்டத்தில் பொன்விழாவை நடத்த சசிகலாவுக்கும், எடப்பாடிக்கும் தோட்டத்து பங்களாவில் வசிக்கும் நபர்களிடமிருந்து அனுமதி பெற்றுள்ளனர். இரண்டு அணியினரும் ஒரே இடத்தில் நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதிப்பது என போலீசார் குழப்பத்தில் உள்ளனர். அதே 17-ந்தேதி சட்டமன்றம் கூட்டம் துவங்குவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகிடுமோ என்ற குழப்பம் காவல்துறையில் நிலவுகிறது.

 எம்ஜிஆர் அண்ணன் மகள்களான லதா, சுதா, கீதா ஆகிய 3 பேரும் ஆளுக்கு ஒரு முடிவை எடுத்து இரண்டு அணிகளுக்கும் ஒரே தேதியில் மாறுபட்ட அனுமதி வழங்கி உள்ளதால் எம்ஜிஆர் குடும்பத்தில் அதிமுகவினரால் குழப்பம் உண்டாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS and Sasikala targeting MGR bungalow New confusion in the MGR family


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->