தும்பை விட்டு வாலை பிடிக்கும் மு.க ஸ்டாலின்! ரவுண்டு கட்டிய எடப்பாடி! - Seithipunal
Seithipunal


கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வீதம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை திறந்துவிட விட வேண்டும் என காவேரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு சேர வேண்டிய ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான பங்கு நீரை தமிழக அரசு சட்டப்படி அரசியல் அடுத்ததோடு பெற்றிருக்க வேண்டும் என எதிர் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடியா திமுக அரசு கும்பகர்ணன் போல் தூங்கிவிட்டு மேட்டூர் அணையிலிருந்து நீரை எல்லாம் காலி செய்த பின் பெயருக்கு மத்திய அரசை காரணம் காட்டி காலதாமதம் செய்ததை தவிர காவிரி நீர் பிரச்சினக்கு எந்த ஒரு துரும்பையும் கில்லி போடவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். 

விவசாயிகள் உள்ளிட்ட தமிழக மக்கள் மீது விடியாத் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறை இருந்திருந்தால் கடந்த ஜூன் மாதத்தில் கர்நாடகா தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட போது அணைகளில் தண்ணீர் அதிகமாக இருந்த சமயத்தில் அவருடன் நட்பாக பேசி காவிரி தண்ணீரை திறந்து விட செய்திருக்கலாம். 

இண்டியா கூட்டணி கூட்டம் பாட்னாவில் கூடிய போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தன் மாநில மக்கள் கொண்டு எவ்வாறு நிபந்தனை அடிப்படையில் கூட்டணியில் அங்கம் வகிக்க நிபந்தனை சம்மதித்ததோ, அது போன்று காவிரியில் காங்கிரஸ் அரசு தண்ணீரை திறந்து விட்டால் தான் கூட்டணியில் அங்கம் வைப்போம் என நிபந்தனை விதித்திருக்கலாம்.

காவிரி டெல்டா பகுதிக்கு பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி நிறங்கள் பாலைவனமான நிலையில் இண்டியா கூட்டணியில் சார்பில் பெங்களூரில் கூடி கூட்டத்திற்கு வரமாட்டேன் எனவும், என் மாநில மக்கள் நலனை முக்கியம் எனவும், நானும் ஒரு டெல்டாக்காரன் தான் எனவும் தெரிவித்து திரு ஸ்டாலின் பெங்களூர் கூட்டத்தில் கலந்து கொண்டதை தவிர்த்து இருக்கலாம்.

அதை விட்டுவிட்டு, தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது போல இது எதையும் செய்யாமல் ஒன்றிய அரசு என வாய்வீரம் காட்டிவிட்டு மத்திய அரசின் பின்னால் ஓடி ஒளிந்து கொண்டு தமிழக மக்களை வஞ்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல. கர்நாடகாவில் தங்கள் குடும்ப நண்பர்கள் நடத்தும் தொழில்கள் பாதித்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் காவிரி பிரச்சனையில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு வக்காலத்து வாங்குவதை தவிர்த்து விடியா திமுக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். 

விவசாயிகள் மீது இனியாவது அக்கறை கொண்டு காவிரி பிரச்சனைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் உடனடியாக கூட்டி தமிழக மக்களின் உரிமையை காத்திட, காவிரி விரைந்து பெற்றிட, ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்என்று இந்த விளையாட்டா திமுக அரசு வலியுறுத்துகிறேன்' என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS condemns MKStalin in Cauvery issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->