சூதாட்ட நிறுவனத்தின் பாவப்பணம்.. "வெட்கக்கேடு".. ஸ்டாலினை சாடிய எடப்பாடி.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி பத்திரம் மூலம் விதி வழங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல லாட்டரி நிறுவனத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அதிக அளவில் நிதி வழங்கியிருப்பது  சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திமுக தனது தேர்தல் நிதியாக பத்திரம் மூலம் லாட்டரி நிறுவனத்திடம் சுமார் 510 கோடி ரூபாய் பெற்றிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பி உள்ளது.. அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் திமுகவையும் முதல்வர் மு.க ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில் லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது. சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.

ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.

மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர், திரு.மு.க ஸ்டாலின் அவர்களுக்கு , வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS criticized DMK govt ElectoralBond from gambling company


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->