பத்திரிகையாளர்களே.. "நீங்கள் நலமா.!".. பங்கமாக கலாய்த்த ஈ.பி.எஸ்.!!
EPS criticized journalist neengal nalama scheme
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விழாவில் கலந்துகொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் தமிழக முதலமைச்சர் நீங்கள் நலமாக இனம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதாக தெரிவித்ததோடு "பத்திரிக்கையாளர்களே.. நீங்கள் நலமா?" என கேட்டதும் அனைவரும் மத்தியிலும் சிரிப்பாலே எழுந்தது. அதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என குற்றம் சாட்டினார்.
திமுக மாவட்ட செயலாளர் சிகிச்சை என்பவரின் கட்சி அலுவலகத்திற்கு கீழே செயல்பட்டு வந்த கொரியர் அலுவலகத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ய முயற்சித்த போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடக நண்பரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள் அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அது என்ன ஆனது என தெரியவில்லை. அதனால நீங்க எல்லாரும் நலமா இருக்கீங்களா? என கேட்டதற்கு செய்தியாளர்கள் அனைவரும் மௌனம் காத்தனர்.
அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஏன் பேச மறுக்கிறீங்க.. பேசலனா உங்களையெல்லாம் எப்படி காப்பாற்றுவது... நாட்டில் உள்ள பிரச்சனையை எடுத்துரைப்பது பத்திரிக்கை நண்பர்களும் ஊடக நண்பர்களும் தான்.. உங்களுக்கு முதலில் முழு பாதுகாப்பு வேண்டும். அப்போதுதான் உண்மைச் செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முடியும். இவ்வாறு செய்திகளை சேகரிக்க செல்லும் ஊடக நண்பர்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
English Summary
EPS criticized journalist neengal nalama scheme