ஒரே சாதி கூடாது! சரிக்கு சமமாக பெண் நிர்வாகிகள்! மா.செ கூட்டத்தில் ஈபிஎஸ்-ன் அதிரடி ஆர்டர்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமாலை எம்ஜிஆர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை பொன்விழா எழுச்சி மாநாட்டில் பணியாற்றிய மாநாட்டுக் குழுவினரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், மதுரை மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

மேலும் இந்த கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொது தேர்தலில் நடைபெற்றால் அதற்கேற்றார் போல் தயாராகும் வகையில் பூத் கமிட்டி அமைப்பது, புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை வழங்கியுள்ளார்.

 சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி பூத் கமிட்டி அமைப்பது, பகுதி வாரியாக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக புதிய நிர்வாகிகள் நியமனத்தில் பெருமளவு இளைஞர்கள் இருக்க வேண்டும். அவர்களின் பெண்கள் சரிக்கு சமமாக இருக்க வேண்டும். குறிப்பாக கட்சியின் விசுவாசிங்களா இருக்க வேண்டும். திமுகவின் தில்லுமுல்லுகளை ஆராய்ந்து பதிலடி கொடுத்து முறியடிக்கும் திறனுள்ளவர்களா இருக்க வேண்டும் என என உத்தரவிட்டு உள்ளாராம்.

அதேபோன்று பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் செய்யும்போது ஒரே தெருவுக்குள் இருக்கும் ஆட்களை மட்டும் கொண்டு அமைத்து விடக் கூடாது, ஒரே சாதியில் மட்டுமே இருக்கும் வகையில்  அமைக்கக் கூடாது. உறவினர்களுக்கு பதவி வழங்குவதை விட கட்சிக்காக உழைப்பவர்களுக்கு பதவி வழங்க வேண்டும்.

புதிதாக நியமனம் செய்யும் பூத் கமிட்டி உறுப்பினர்களை அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் நேரடியாக சென்று சரி பார்க்க வேண்டும். இது தொடர்பான அனைத்து விவரங்களையும் நேரடியாக எனக்கு அனுப்ப வேண்டும். அதனை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் நேரடியா பார்வையிடுவார்கள்.

மேலும் தலைமைக் கழக நிர்வாகிகள் நேரடியாக பார்வையிட்டாலும் இது குறித்தான அனைத்து விவரங்களும் தனித் தகவலில் எனக்கு வந்து சேரும். கட்சிக்காக சிறப்பா செயல்படுபவர்கள் அதிமுக தலைமையால் கௌரவிக்கப்படுவார்கள்"  என எடப்பாடி பழனிச்சாமி பூத் கமிட்டி குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS orders AIADMK executives to set up booth committee


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->