முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஈபிஎஸ் மரியாதை! - Seithipunal
Seithipunal


முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழா சீரும் சிறப்புமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இன்று நடைபெறும் ஜெயந்தி விழாவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், சி.விஜயபாஸ்கர், கோகுல இந்திரா, ராஜேந்திர பாலாஜி, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS paid tribute at muthuramalinga devar memorial


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->