தாழ்த்தப்பட்டோர் குறித்து பேச திமுகவுக்கு தகுதி இல்லை.!! செய்தியாளர் சந்திப்பில் பந்தாடிய எடப்பாடி.!!
EPS said DMK not qualified to talk about SC ST
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரையில் நடைபெறும் மாநாடு குறித்தும், அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும், எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் மாவட்டச் செயலாளர்களுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியதாக தெரிய வருகிறது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம் தமிழ்நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அவர் "தமிழக முதல்வருக்கு விலைவாசி உயர்வு பற்றி கவலை இல்லை. இப்போது வந்துள்ள குட்டி அமைச்சர் நடித்துள்ள படத்தைப் பற்றி தான் கவலை.
என்னமோ ஒரு திரைப்படத்தின் மூலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எழுச்சி ஏற்படுவது போல தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். நான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன்முதலாக ஆளுநரை உத்தரவுப்படி எங்களுடைய சட்டப்பேரவை தலைவர் அண்ணன்தனபால் அவர்கள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என சட்டமன்றத்தை கூட்டினார்.
ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சபாநாயகர் தனபால் அவர்களை இழுத்து கீழே தள்ளி சட்டையை கிழித்து ரகலையில் ஈடுபட்டு சட்டப்பேரவையின் மாண்புக்கு எதிராக புனிதமான சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தது தான் திமுக.
இவர்களா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்ய போகிறார்கள். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் உயர் பதவியில் இருந்து அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுகின்ற மாமன்ற சட்டப்பேரவை தலைவரின் சட்டையை கிழித்து கீழே தள்ளிய சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்த அந்த இருக்கையில் இருந்து இறக்கியது திமுக தான். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைப் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது.
ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். தாழ்த்தப்பட்ட மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் இன்று ஏற்றம் பெறுவதற்கு அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த கல்வி திட்டங்கள் தான் காரணம். தாழ்த்தப்பட்ட மக்கள் உயர் பதவிகளுக்கு வருவதற்கு காரணம் அதிமுக அரசாங்கம் மட்டும் தான். தாழ்த்தப்பட்ட மக்கள் உயர் கல்வி முதல் பட்டய படிப்பு வரை படிக்க காரணம் அதிமுக ஆட்சி மட்டும் தான். வேற எந்த கட்சிகளுக்கும் அருகதையும் கிடையாது தகுதியும் கிடையாது" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
EPS said DMK not qualified to talk about SC ST