#Breaking: ஓ.பி.எஸ் உடன் மீண்டும் கைகோர்ப்பா.? - எடப்பாடி திட்டவட்டம்.!
eps said that ops never join with him
அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை தலைதூக்கி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. சமீபத்தில், அதிமுக தலைமையில் பொதுக்குழு நடைபெற்றதில் ஒரு மனதாக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். கட்சியிலிருந்து, பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து எடப்பாடி மேல்முறையீடு செய்த நிலையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில், அடுத்ததாக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ஓபிஎஸ் கட்சியில் இல்லை என்ற காரணத்தால் அதிமுக என்ற பெயரை அவர் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்ததாக ஓ.பி.எஸ் தனிக்கட்சி துவங்க போகிறார் என்று சர்ச்சைகள் எழுந்து வருகின்றன..
இதனை தொடர்ந்து தற்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் மீண்டும் ஓ.பி.எஸ்ஸுடன் இணைவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஓ.பி.எஸ் உடன் இணைய 100% வாய்ப்பு இல்லை." என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
English Summary
eps said that ops never join with him