தன்னை தானே புகழும் முதல்வர்.. என்ன செஞ்ச சொல்லு.. ஸ்டாலினை வறுத்தெடுத்த ஈபிஎஸ்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்வதால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியின் வேட்பாளர் கே.எஸ் தென்னரசு ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலினையும் திமுக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுக்காக திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் செய்த பொழுது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது "ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.எஸ் தென்னரசு கொண்டு வந்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்மை செய்தார். அவ்வாறு ஒரு திட்டத்தை திமுகவினரால் சொல்ல முடியுமா.?

துணிவு, தெம்பு, திராணி இருந்தால் நாளை வரும் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கொண்டுவரப்பட்ட ஒரு திட்டத்தை சொல்ல முடியுமா..? நாளை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் ஸ்டாலின் தான் சூப்பர் முதல்வர். இந்தியாவிலேயே நான்தான் முதன்மை முதலமைச்சர் என தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்.

இந்த நாட்டினுடைய சூப்பர் முதலமைச்சர், இந்தியாவுக்கே முதன்மை முதலமைச்சர் என சொல்லிக் கொள்ளும் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வந்து இந்த தொகுதியில் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தேன் என சொல்லு. இந்த ஈரோடு மாவட்டத்தை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பிரித்துக் கொடுத்தது பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான்.

இந்த ஈரோடு மாவட்டம் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் எம்ஜிஆர் போட்ட விதைதான். அந்த விதை தான் இன்று செடியாகி, மரமாகி கனிகளை கொடுத்துக் கொண்டுள்ளது. ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு செய்த ஒரு நன்மையை சொல்லிவிட்டு போகட்டும். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா கிளினிக், தாலிக்கு தங்கம், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் போன்ற திட்டங்களை முடக்கி விட்டனர். உதயநிதி ஸ்டாலின் தூக்கி காட்டும் ஒரு செங்கல் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. அப்போதைய விலை வெறும் ரூ.6 ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் அந்த செங்கலின் விலை ரூ12 ஆக உயர்ந்து உள்ளது" என திமுக அரசையும் மு.க ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS severely criticized Chief Minister MKStalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->