#Breaking :: அதிமுகவால் செயல்பட முடியவில்லை... உடனடியாக விசாரிக்க வேண்டும்... இபிஎஸ் தரப்பு கோரிக்கை..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்ற மேல்முறையீடு வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கின் விசாரணையில் ஆஜரான இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு நிலுவையில் இருப்பதால் கட்சி பணிகளை மேற்கொள்ள முடியாமல் செயல்படாத நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பொதுக்குழு மேல்முறையீட்டு மனுக்களை உடனடியாக விசாரிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் "சிவில் வழக்கு இன்னும் உயர்நீதிமன்றத்தில் நிழுவையில் தானே உள்ளது? பிறகு ஏன் அவசரம் காட்டுகிறீர்கள்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஓபிஎஸ் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS side argued in SC AIADMK activities are at standstill


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->