தேவரா படத்தின் 3-வது பாடல் எப்போது வெளியாகும்?  - Seithipunal
Seithipunal


இயக்குனர் கொரட்டலா இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தேவரா பாகம்-1'. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்தப் படத்தின் இறுதி கட்ட பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, இந்தப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்ற நிலையில், விரைவில் 3-வது பாடலான 'தாவுடி' வெளியாகும் என்று அனிருத் அப்டேட் கொடுத்திருந்தார். அதன் படி, 'தாவுடி' வீடியோ பாடல் வரும் 4-ம் தேதி வெளியாக உள்ளது என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devara movie third song release date announce


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->