பெண் மருத்துவர் பாலியல் கொலை எதிரொலி - தமிழக அரசு பிறப்பித்த்ய அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதன் எதிரொலியாக, நாட்டில் உள்ள மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, மருத்துவமனையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இது குறித்து இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு, மாவட்ட அதிகாரி, வருவாய் நிர்வாக அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு மருத்துவ, ஊரக நலப்பணி இயக்குநர் ராஜமூர்த்தி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

* மருத்துவமனை பணியாளர் பாதுகாப்புக்காக ஆலோசனை, பாதுகாப்பு என்று இரண்டு கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும்.

* மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். 

* குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதி, அடையாள அட்டை வழங்க வேண்டும். 

* மருத்துவமனையில் இரவு நேர பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவமனையைச் சுற்றி மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.

* மருத்துவ பணியாளர்களை தாக்கினால் மருத்துவ பணியாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பதாகை வைக்க வேண்டும். 

* மருத்துவமனைகளில் கண்டிப்பாக ஒரு காவல்துறை மையம் அமைக்க வேண்டும். இந்த உத்தரவுகள் அனைத்தையும் உடனே அமல்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt restriction to all hospitals for kolkatta woman doctor murder


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->