வைரலாகும் ரஜினிகாந்தின் கூலி பட கதாபாத்திர போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதற்கிடையே, படத்தில் பிற மொழி நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், கூலி படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் விரைவில் துவங்கும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். அதன் படி, 'கூலி' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தேவா கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக, கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை சுருதி ஹாசன், மலையாள நடிகர் சவுபின் சாஹிர், நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகர் உபேந்திரா ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director lokesh kanakaraj published rajinikanth kooli movie poster


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->